புகையிலை பொருள் விற்றதாக ஒருவர் கைது: 8 கிலோ குட்கா பறிமுதல்

குமாரபாளையத்தில், புகையிலை பொருட்கள் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்; 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-12-09 03:45 GMT

குமாரபாளையத்தில், மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் பேரில்,  புகையிலை பொருட்கள் விற்பவர்களை பிடிக்கும் பணியில்,  இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விட்டலபுரியில் உள்ள ஒரு மளிகைக்கடை ஒன்றில், குட்கா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடை அருகே மறைந்திருந்து கண்காணித்தபோது,  குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் இளங்கோ, 56, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  இளங்கோவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News