குமாரபாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி மொழியை திட்டமிட்டு திணிக்கும் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2022-04-19 16:15 GMT

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தி மொழியை திட்டமிட்டு திணிக்கும் போக்கை கைவிடு, மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி சி.பி.எம். சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர குழு உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் கந்தசாமி, காளியப்பன், சரவணன், மாதேஷ் உள்ளிட்டோர்  கோரிக்கைகள் வலியுறுத்தி  கோஷங்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கட்சி கொடிகளை ஏந்தியவாறும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். 




Tags:    

Similar News