குமாரபாளையம் அருகே சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-05-23 15:30 GMT

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் ஒன்றிய சி.பி.எம் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் ஒன்றிய சி.பி.எம் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் தனேந்திரன் தலைமையில், நூல் விலையை குறைத்து, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாத்திட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பஞ்சு பதுக்கல், மத்திய அரசின் தவறான ஏற்றுமதி கொள்கை கைவிட வேண்டும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு பஞ்சு கழகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டன.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலர் தனபால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேகர், சண்முகம், வெங்கடாசலம், மணிகண்டன் உள்ளிட்ட டேப் மெசின் தொழில் செய்பவர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News