குமாரபாளையத்தில் சி.பி.எம். வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
குமாரபாளையத்தில் சி.பி.எம். வேட்பாளர் சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
குமாரபாளையம் சி.பி.எம். கட்சி கிளை நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் சண்முகம், 48. விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.எம். கட்சியில் பணியாற்றி வருகிறார்.
ஏராளமான ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் ஆகியவற்றில் பங்கேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகளின் நன் மதிப்பை பெற்றவர். தி.மு.க. கூட்டணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சி.பி.எம்.கட்சிக்கு 12வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நகராட்சி அலுவலகத்தில் சண்முகம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருடன் நகர செயலர் சக்திவேல், நிர்வாகிகள் வெங்கடேசன், மேகநாதன், நாகராஜ், சந்திரசேகரன், கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.