குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு வீடு வழங்க சி.பி.எம். கோரிக்கை

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு மக்களுக்கு வீடு வழங்க சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2022-08-07 14:15 GMT

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு பகுதிகளை சி.பி.எம். மாவட்ட செயலர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் கரையோர வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சி.பி.எம். மாவட்ட செயலர் கந்தசாமி தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து கந்தசாமி கூறுகையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக வாழ்ந்திட புதிய குடியிருப்புகளை தமிழக அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மருத்துவ வசதிகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் நகர செயலர் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் சண்முகம், சரவணன், மாதேஷ், வெங்கடேசன், அர்சுணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News