100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை பஞ்சாயத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை பஞ்சாயத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை பஞ்சாயத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு அவர்களது சம்பளப் பணம் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே உடன் சம்பள பாக்கி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கிட வலியுறுத்தியும், ராஜம் தியேட்டர் அருகே முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், ஒன்றிய செயலாளர் சந்திரமதி, மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர் தனேந்திரன் உள்ளிட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். நிர்வாகிகள் சம்பூர்ணம், வேலுச்சாமி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று 100 நாள் வேலைக்கான சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை பஞ்சாயத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.