குமாரபாளையத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.பி.ஐ.எம்.எல்.கட்சி சார்பில் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-02 03:29 GMT
குமாரபாளையத்தில் சி.பி.ஐ.எம். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சி.பி.ஐ.எம். எல். கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குமாவட்ட குழு உறுப்பினர் முருகன்  தலைமை தாங்கினார்.

நலவாரியம் அறிவித்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையை இரு பாலருக்கும் வழங்கவேண்டும், கட்டுமான நலவாரிய நிதியை வேறு பயன்பாடுகளுக்கு செலவிடக்கூடாது, கோவிட் தடுப்பூசி போட செலவிட்ட வாரிய நலப்பயன் பணத்தை திரும்ப செலுத்தவேண்டும், வாரிய ஊழல்களை களைய வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலர் சுப்ரமணி, ஒன்றிய செயலர் வெங்கடேசன், மாவட்ட செயலர் கதிரவன், நிர்வாகிகள் மாணிக்கம், அசோக், பாலகிருஷ்ணன், சுரேஸ், முருகன், நாகராஜ், கலைவாணி, பேபி, பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனு ஓ.ஏ.பி. தாசில்தார் சிவகுமாரிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News