காவிரி கரையோர மக்களுக்கு மாற்று இடம் கேட்டு சி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

CPI Political Party -குமாரபாளையத்தில் காவிரி கரையோர மக்களுக்கு மாற்று இடம் கேட்டு சி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-09-22 02:05 GMT

குமாரபாளையத்தில் காவிரி கரையோர மக்களுக்கு மாற்று இடம் கேட்டு சி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

CPI Political Party -குமாரபாளையம் காவிரி கரையோர மக்கள், வெள்ளம் வந்தால் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப் படுவதும், மாற்று இடம் வழங்கப்படும் என்பதும் வழக்கமாக நடந்து வருவதுதான். தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக வெள்ளம் வந்ததால் பெரும் துன்பத்திற்கு இப்பகுதி மக்கள் ஆளாகினர். மாற்று இடம் கேட்டு சி.பி.ஐ. சார்பில் தாலுகா அலுவலகம் முன்பாக நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது சம்பந்தமான கோரிக்கை மனு டி.எஸ்.ஓ.(பொ) மற்றும் தாலுகா தேர்தல் அலுவலர் சித்ராவிடம் வழங்கப்பட்டது. மாவட்ட குழு நிர்வாகி மணிவேல் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் வழக்கறிஞர் கார்த்தி, அர்த்தனாரி, ரவி, அசோகன், விஜய்ஆனந்தன் உள்ளிட்ட பலருடன் காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News