இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது நகர மாநாடு

குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது நகர மாநாடு நடைபெற்றது

Update: 2022-04-17 12:30 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11வது நகர மாநாட்டில் மூத்த நிர்வாகி ஈஸ்வரன் உரையாற்றுகிறார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது நகர மாநாடு நகர செயலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் குழந்தான் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.

புதிய நிர்வாகிகளாக நகர செயலர் கணேஷ்குமார், துணை செயலர்கள் அசோகன், விஜய் ஆனந்த், பொருளர் மனோகரன், நிர்வாகிகள் கேசவன், மணி, மணிவேலன், சரசு, சேகர், மாதேஸ் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில கட்டுபாட்டு குழு நிர்வாகி மணிவேல் மாநாட்டை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி பேசினார்.

சமீபத்தில் உயிரிழந்த கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடி வசுமதி, அழகுமுத்துபாண்டியன், குமாரபாளையம் சென்னியப்பன், ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டில், நூல்விலை உயர்வை கட்டுப்படுத்தி விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும், புதிய தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும், பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை சேலம், ஈரோட்டிற்கு அனுப்புவதை தவிர்த்து இங்கேயே அதிக டாக்டர்கள் நியமித்து சிகிச்சை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈஸ்வரன், கிருஷ்ணசாமி, வக்கீல் கார்த்திகேயன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்

Tags:    

Similar News