ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-05-11 15:22 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


தடுப்பூசி முகாமிற்கு, ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர்கள் ஓம்சரவணா, ஐஸ்வர்யலட்சுமி முன்னிலை வகித்தனர்.

முகாமில் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட குமாரபாளையம், பள்ளிபாளையம் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கு வந்தவர்களில் மொத்தம் 98 பேருக்கு கோவேக்‌ஷின் தடுப்பூசி போடப்பட்டது.

Tags:    

Similar News