குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனை முகாம்

குமாரபாளையத்தில் மார்க்காள் காடு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.;

Update: 2021-11-23 14:30 GMT

குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனை முகாம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மார்க்காள் காடு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனை முகாம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மார்க்காள் காடு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் நடைபெற்றது.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர் ரஞ்சிதா ஆலோசனைகள் கூறியதாவது:

பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனது விபரங்களை பதிவு செய்து ஆர்.சி.எச். எண்களை பெறவேண்டும். குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு இது உடஹ்வியாக இருக்கும். தாய்க்கும், சேய்க்கும் வழங்கப்படும் நிதியுதவி பெற்று பயனடையலாம்.

கர்ப்பிணி பெண்கள் குறைந்தது மூன்று முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிரதி மாதம் எடை பார்த்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவு உண்ண வேண்டும். தாய், சேய் நல அட்டையில், தேவையான முழு தகவல்கள் இருக்கும்.

இதன் மூலமாக குடும்பத்தினர் குழந்தையின் வளர்ச்சி பற்றி முன்னேற்றத்தை கண்காணிக்க உதவுகிறது. போக்குவரத்துக்கு வசதிகளை தயார் படுத்துதல், பிரசவத்திற்கு தேவையான பணத்தை சேமித்தல், வண்டி, வாகனம் தயார் நிலையில் வைத்தல், கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதம் முதல் டி.டி. தடுப்பூசியும், 5வது மாதம் இரண்டாம் தடுப்பூசியும், தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். டாக்டர் அம்ற்றும் செவிலியர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.

அங்கன்வாடி பணியாளகலைவாணி, கர்ப்பிணி பெண்கள் சண்முகப்பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News