பவானி அருகே ரூ.29.33 லட்சத்திற்கு பருத்தி ஏலம்; 365 விவசாயிகள் பயன்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 29.33 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 29.33 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
இங்கு 1,226 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக வந்தது. கிலோ 76.96 முதல் 81.89 ரூபாய் வரையில் ஏலம் போனது. மொத்தம் 401.86 குவிண்டால் எடையுள்ள பருத்தி 29 லட்சத்து 33 ஆயிரத்து 861க்கு விற்பனையானது. இதில் 365 விவசாயிகள் பயனடைந்தனர்.
பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 4,400 தேங்காய்கள் வந்ததில் கிலோ 26 ரூபாய் முதல் 31 ரூபாய் வரை விற்பனையானது.