குமாரபாளையத்தில் கொரோனா வார்டு, வி.ஏ.ஒ. அலுவலகம் கலெக்டர் ஆய்வு

குமாரபாளையத்தில் கொரோனா வார்டு, வி.ஏ.ஒ. அலுவலகம் கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2022-01-25 15:00 GMT

ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரேயா சிங்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 80 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார். 

இதனையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, சுகாதாரத்துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர் வெங்கடேசன் ஆகியோரிடம் ஆலோசனை வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து குமாரபாளையம் அக்ரஹாரம் வி.ஏ.ஒ. முருகன் அலுவலகத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News