குமாரபாளையத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு டூவீலர் பேரணி
குமாரபாளையம் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு டூவீலர் பேரணி நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், விடியல் ஆரம்பம், தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பினர் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு டூவீலர் பேரணி நடைபெற்றது.
நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி 33 வார்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இதில் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் நடேசன், சிவசுந்தரம், பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். குமாரபாளையத்தில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.