தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
தட்டாங்குட்டையில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மக்கள் பயன்பெற ஊராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.;
இதுகுறித்து தட்டாங்குட்டை ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு அறிவித்ததன் படி, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்திரவிற்கு இணங்க இன்று (23ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
1) கல்லாங்காட்டு வலசு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2) தட்டாங்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
3) அருவங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
4) வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
5) ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
6) வேமன்காட்டுவலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
7) எதிர்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
8) குளத்துக்காடு
ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு தட்டாங்குட்டை ஊராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.