குமாரபாளையம் பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்கள்
குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.;
குமாரபாளையம் பகுதியில் ஜி.ஹெச், ரோட்டரி ஹால், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல், பள்ளிபாளையத்தில் கொக்காராயண்பேட்டை, தொட்டிக்கார பாளையம் பள்ளி, பாப்பம்பாளையம் பள்ளி, செங்குட்டுபாளையம் பள்ளி, சவுதாபுரம் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடபட்டது.
பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணைகளாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.