குமாரபாளையத்தில் 47 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமாரபாளையத்தில் 47 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் 47 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் 57 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 47 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 7 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள 5,10,12,13, 15 வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் கூறினார்.