பள்ளிப்பாளையம்: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், முழுவதுமாக அப்பகுதி சீல் வைக்கப்பட்டது.;

Update: 2021-06-05 13:18 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னமும் குறையவில்லை. தொற்று பரவாமல் தடுக்க, அரசு நிர்வாகங்கள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. இதனால், தற்போது பாதிப்பு சற்று  குறையத் தொடங்கி உள்ளது. 
இந்நிலையில்,  பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று மாலை பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில்,  அந்தப் பகுதியில் வெளிஆட்கள் நுழையாத வண்ணம், தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மேலும் அங்கு மருத்துவக்குழுவினர் வீடு வீடாகச் சென்று, சளி ,காய்ச்சல் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News