குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
குமாரபாளையம், பவானி- காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.;
குமாரபாளையத்திலிருந்து பவானிக்கும், பவானியிலிருந்து குமாரபாளையத்திற்கும் செல்லும் பொதுமக்களை அழைத்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.
கொரோனா தொற்று பல மாவட்டங்களில் பரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற முகாம் நடத்தி பரிசோதனை செய்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.