கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பங்கேற்பு
குமாரபாளையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பங்கேற்றார்.;
கொரோனா விழிப்புணர்வு வாரம் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் நாளான நேற்று மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு தாசில்தார் தமிழரசி மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் மரகதவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் முககவசம், கபசுர குடிநீர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் மரகதவள்ளி பொதுமக்களுக்கு வழங்கினார். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.-க்கள் முருகன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.