தொடரும் ஊரடங்கு.. கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்
தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம், அரசின் உதவி தேவை என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கவலையில் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அலை 2 வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு மற்றும் நேரக் கட்டுப்பாடு வாகன போக்குவரத்தில் நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கை எடுத்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர்.
இந் நிலையில் தொடரும் அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் ஏதேனும் நிவாரண உதவி உள்ளிட்டவைகளை வழங்கவேண்டுமென ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.