குமாரபாளையம்: வாக்குச்சாவடி அலுவலர்களுடன் நகராட்சி கமிஷனர் ஆலோசனை

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் நகராட்சி கமிஷனர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Update: 2021-10-06 14:15 GMT

குமாரபாளையத்தில்,  வாக்குச்சாவடி அலுவலர்களுடன்,  நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கொரோனா தடுப்பூசி முகாம் பற்றி பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, ஆலோசனைகள் வழங்க வாக்குச்சாவடி அலுவலர்களுடன் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு,  100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று,  மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை பொதுமக்களிடத்தில் வீதிவீதியாக, வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வயதானவர்கள், வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்களின் நோய் தன்மை குறித்து டாக்டரிடம் கலந்து பேசி தடுப்பூசி போட்டுக்கொள்ள தைரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.க்கள் செல்வராஜ், சவுந்தர்ராஜன், ஆர்.ஐ. கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News