தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம்

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-08-09 16:00 GMT

கொரோனா விழிப்புணர்வு ஊரடங்கு குறித்து தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற வணிக நிறுவனத்தாருடனான ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தமிழரசி பேசினார்.

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தமிழரசி பேசியதாவது: தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கடையின் முன்பும் கிருமிநாசினி மருந்து வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அரசு நிர்ணயம் செய்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும். விதி மீறுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், அந்தந்த பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வி.ஏ.ஒ-க்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.-க்கள் முருகன், செந்தில்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News