குமாரபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சதீஷ்குமார் பேசியதாவது:
இந்த பகுதியில் குழந்தை திருமணம், இள வயது கருவுருதல், அதிகம் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளை காத்திட மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்குகிறது. இது குமாரபாளையம் பகுதியில் 90 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இதுவரை 4 கோடியே 70 லட்சம் நிதி வழங்கபட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 69 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுதும் 713 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் ஜே.கே.கே.ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஐ. மலர்விழி, துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், சியாமளா, கிருஷ்ணவேணி, தன்னார்வலர்கள் செந்தில், செல்வராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.