லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2024-08-08 12:45 GMT

குமாரபாளையத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம், குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், மத்திய லயன்ஸ் சங்கம், டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம், பவானி, குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், உதவும் கரங்கள், ஈரோடு மணியன் மெடிக்கல் செண்டர் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை, ரத்ததான முகாம், புற்று நோய் கண்டறிதல் முகாம், மகப்பேறு மருத்துவம், பல் சிகிச்சை முகாம், சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் ஆக. 11ல், காலை 09:00 மணி முதல், மாலை 01:00 மணி வரை, குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த முகாமினை மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஷ், கதிர்வேல், சரவணகுமார், சவுந்தர், மோகன், முருகன் தலைமையில் நடந்தது. முகாம் குறித்து அனைத்து பகுதியில் விளம்பரம் செய்தல், வரும் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்குதல், மருந்துகள் இலவசமாக வழங்குதல், தாய்ப்பால் வார விழா கொண்டாடுதல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டி, அனைத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Similar News