குமாரபாளையத்தில் கழிவுநீர் அகற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம்!
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.;
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம் ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, பள்ளிபாளையம் ஆணையாளர் தாமரை, பொறியாளர் ரேணுகா, உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
இது பற்றி குமாரபாளையம் நகராட்சி ஆணையர் கூறியதாவது:
குமாரபாளையம் நகரட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் கசடு, கழிவுநீர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறை வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், நகராட்சி கழிவுநீர் வாகனம் மற்றும் நகராட்சியில் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற TN 49 AF 9086, TN 45 BM 0813 ஆகிய வாகனங்கள் மூலம் மட்டுமே குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் கசடு, கழிவுநீர் நீக்கம் செய்யும் பணிகளை தக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு அகற்றி, இடைப்பாடி நகராட்சிக்கு சொந்தமான கசடு, கழிவுநீர் நீரேற்று நிலையத்தில் முறையாக விட வேண்டும். நகராட்சியில் உரிமம் பெறாத வாகனங்களை கொண்டு நச்சுத் தொட்டிகளில் கசடு கழிவுநீர் பணிகளை மேற்கொள்ளக்கூடாது.அவ்வாறு அப்பணியினை மேற்கொண்டு அதனால் ஏற்படும் விபத்துக்களுக்கு குடியிருப்பு உரிமையாளர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள். மேலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் மறுவாழ்வு சட்டத்தின்படி அபராதம், சிறை தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.