குமாரபாளையத்தில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அளவில் திமுக-விற்காக உழைத்த ஆயிரம் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படவுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
குமாரபாளையம் திமுக சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜன. 25ல் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், ஜன. 28ல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்து குமாரபாளையம் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர செயலர் செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலர் மதுரா செந்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு நிர்வாகி மாணிக்கம், மாவட்ட பொருளர் ராஜாராம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள். கூட்டத்தில் மதுரா செந்தில் பேசியதாவது:
ஜன. 25ல் நடைபெறவுள்ள மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், நமது மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு நிகழ்வு ஆகியவற்றில் பெருந்திரளாக கட்சியினர் பங்கேற்க வேண்டும். உதயநிதி நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் திமுக-விற்காக உழைத்த ஆயிரம் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படவுள்ளது. குமாரபாளையம் நகர மூத்த நிர்வாகிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கப்படவுள்ளது. சரியான நபர்களை தேர்வு செய்து தாருங்கள். எதிர்வரும் தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றிக்கு அயராது பாடுபட்டு வெற்றி பெற செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள், சத்தியசீலன், ரங்கநாதன், அம்பிகா, தீபா, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.