குமாரபாளையத்தில் பா.ம.க. ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் அருகே பா.ம.க. மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2023-12-04 13:00 GMT

பாமக ஆலோசனை கூட்டம் 

குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். அனைத்து ஒன்றிய பகுதியிலும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் அதிகளவு மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகி வருவதால், கொசுக்கள் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் ஒரு சில இடங்களில் சரிவர சாலை வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருவதால், சாலைகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டத் தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சிவராமன், மாவட்ட மகளிர் அணி தலைவி சுதா, மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி, தொழிற்சங்க தலைவர் தங்கவேல், நிர்வாகிகள் ஜெகன், கவுதம், ஆனந்த குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் கள்ள மது ஒழிக்க கோரி பா.ம.க. சார்பில் காவல்துறையில்  புகார் மனு கொடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் மதுவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கொலை செய்தது போல், குமாரபாளையத்தில் நடக்காதிருக்க, கள்ள மது விற்பனை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. சார்பில், காவல் ஆய்வாளர் தவமணியிடம் நகர செயலர் கோவிந்தன் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் உறுதியளித்தார். மாவட்ட துணை தலைவர் சவுந்திரராஜன், முன்னாள் மகர செயலர் சோமு, முன்னாள் ஒன்றிய செயலர் ரவிக்குமார், நகர அமைப்பு செயலர் மாதையன், தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கராஜ், கந்தசாமி, முன்னாள் நகர தலைவர் கார்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News