குமாரபாளையம் அருகே போதை ஊசி பயன்படுத்திய கட்டிட கூலிதொழிளார்கள் 15 பேர் கைது
குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய கட்டிட கூலிதொழிளார்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய கட்டிட கூலிதொழிலாளர்கள் 15 பேர் கைது செயயப்பட்டனர். முப்பது லட்ச ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் மயான முட்புதற்களில் போதை மாத்திரைகளும் ஒரு முறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக எப்படி போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது சில இளைஞர்கள் இரவு நேரங்களில் திரண்டு தங்களுக்கு போதை வருவதற்காக மாத்திரையை நீரில் கரைத்து ஊசியாக தங்கள் நரம்புகளில் செலுத்திக் கொள்வது தெரிய வந்தது.
இதுகுறித்து வெப்படை போலீசார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வசம் தெரிவிக்கையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்து 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர்.
இதில் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கட்டிட வேலைக்கு செல்வோர், ஆன்லைன் மூலம் பெறப்படும் வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து தங்கள் கைகளில் ஊசி மூலம் செலுத்தி போதை உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சந்தேகப்பட்ட கிரி ஹரண் (26) சுஜித் (26), கவுரிசங்கர், (21), தீபன், (21), விக்னேஷ், (24) கவுதம்குமார், (32), இலியாஸ் உல்லா, (27), யுவராஜ், (24) கவுதம்குமார், (32) உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்கள் பிடிபட்டனர். சாமான்டூர், பள்ளிபாளையம், குமாரபாளையம், அந்தியூர், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கட்டிட கூலித்தொழிளார்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக தங்கள் நரம்புகளில் செலுத்தியதை ஒப்புக்கொண்டனர் இதற்கான மருந்துகளை ஆன்லைனில் மூலம் பெற்று ஒருவருக்கொருவர் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து சுமார் 10,000 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 15 கூலி தொழிலாளர்களும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தன் போதைக்கு அடிமையான கட்டிட கூலி தொழிலாளர்கள் வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக பயன்படுத்தியது தனியார் மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.