குமாரபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட தாலுகா அலுவலக கட்டுமான பணிகள்
குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் 75 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் 75 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நிதி பற்றாக்குறை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. 75 சதவீத கட்டுமான பணி நிறைவு பெற்ற நிலையில், பிரதி மாதம் தற்காலிக தாலுகா அலுவலகத்திற்கு வாடகையும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கபட்டுள்ளது. விரைவில் தி.மு.க. அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தாலுகா அலுவலக மீதமுள்ள கட்டுமான பணிகள் விரைவில் தொடரும். தற்காலிக நகராட்சி மண்டபத்திலிருந்து புதிய தாலுகா அலுவலகத்திற்கு மாறுதல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.