குமாரபாளையத்தில் புதிய சாலை, வடிகால் அமைக்க அகற்றப்பட்ட மரங்கள்
குமாரபாளையத்தில் புதிய சாலை, வடிகால் அமைக்க மரங்கள் அகற்றப்பட்டன.;
சாலை, வடிகால் அமைக்க அகற்றப்பட்ட மரங்கள்
குமாரபாளையத்தில் சாலை, வடிகால் அமைக்க அகற்றப்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள ஒரு சாலையில் மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டிருந்தன. இந்த சாலை மிகவும் பழுதானதால், புதிய சாலை அமைக்கவும், வடிகால் அமைக்கவும் மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இது குறித்து ஆர்.ஐ. முருகேசன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். எஸ்.ஐ. சந்தியா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொக்லின் மூலம் சுமார் 20க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
குமாரபாளையத்தில் மரங்கள் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பெராந்தர் காடு பகுதியில் சில மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மரக்கன்று நடும் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியில்லாமல் மரம் வெட்டிய நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மரம் நடும் ஆர்வலர் மகாலிங்கம் கூறியதாவது:-
வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்பார்கள். இந்த கோடை காலத்தில் மர நிழல் என்பது அவசியமானது என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மரக்கன்று கூட வைக்காத நபர்கள், மரங்களை வெட்டியிருப்பது வருத்தத்திற்குரியது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மரக்கன்றுகள் நட கற்றுகொடுக்க வேண்டும். பாட புத்தகங்களில் கூட மரக்கன்று நடுதல் அவசியம் குறித்து இடம்பெற செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.