குமாரபாளையத்தில் வடிகால் பாலம் கட்டும் பணி: சேர்மன் துவக்கி வைப்பு
குமாரபாளையத்தில் வடிகால் பாலம் பூமி பூஜையை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.;

குமாரபாளையத்தில் வடிகால் பாலம் பூமி பூஜையை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.
குமாரபாளையத்தில் வடிகால் பாலம் பூமி பூஜையை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் சேலம் சாலை, சவுண்டம்மன் கோயில் அருகே தம்மண்ணன் சாலை நுழைவுப்பகுதியில் வடிகால் மிகவும் சேதமடைந்து, அடிக்கடி கழிவுநீர் வழியில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை, அருகில் இருக்கும் வணிக நிறுவனத்தார், கோவிலில் சுவாமி கும்பிட வருபவர்கள் என பல தரப்பினர் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த வடிகால் பகுதியில் சிறிய பாலம் அமைக்க இப்பகுதியினர் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்ட புதிய சேர்மன் விஜய்கண்ணன் இந்த இடத்தில் வடிகால் பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டார். நகராட்சி பொது நிதியில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் பூமி பூஜையில் சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, சியாமளா, கனகலட்சுமி,விஜயா, வேல்முருகன், ராஜு, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.