காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.;
காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீர் அருகே சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் செய்ததில், 28 பேர் பலியானார்கள். இதில் பலியனாவர்களுக்கு, குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் மெழுவர்த்தி ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மெழுவர்த்தி கைகளில் ஏந்தியவாறு, ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். மாநில பொது செயலர் சாமிநாதன், நகர செயலர் சுப்பிரமணி, நகர பொருளர் சிவராஜ், நிர்வாகிகள் சுந்தரராஜ், காளியப்பன் உள்பட மகளிரணியினர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.