உலக சாதனை படைத்த குமாரபாளையம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
சாதனை மாணவர்கள் இருவருக்கும் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உலக சாதனை படைத்த யூ.கே.ஜி. மாணவி தக்சிகாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சாதனையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குமாரபாளையம் ராஜராஜன் நகரில் வசிப்பவர்கள் சுப்ரமணி, வேதநாயகி தம்பதியர். இவர்களின் மகன் முகேஷ்(15). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம், அம்ரீஷ் என்ற இடத்தில் நடந்த 17வயது பிரிவின் கீழ் தேசிய அளவிலான ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் பரிசாக பெற்றார்.
குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்தவர்கள் முத்துக்குமாரசாமி, சரண்யா தம்பதியர். இவர்களது மகள் தக்சிகா(4). குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். நர்சரி பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். இவரது ஆசிரியர்கள், பெற்றோர்கள் கொடுத்த பயிற்சியால் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டுவதும், 195 நாடுகளின் தலைநகரின் பெயர்களை 4 நிமிடத்திற்குள் சொல்வதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சென்னை தனியார் அமைப்பினர் நடத்திய உலக அளவிலான சாதனை போட்டியில் பங்கேற்று தக்சிகா விருது பெற்றார்.
சாதனையாளர்கள் இருவருக்கும் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இருவருக்கும் பரிசாக புத்தகங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மணிகிருஷ்ணா, சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.