ஈரோடு, இடைப்பாடி செல்லும் பஸ்களில் நீடிக்கும் குழப்பம்; இரண்டுமே கே.1 என்பதால் தடுமாறும் பயணிகள்

குமாரபாளையத்திலிருந்து ஈரோடு, இடைப்பாடி என வெவ்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் கே.1 என ஒரே எண் இருப்பதால் பயணிகள் குழப்பமடைகிறார்கள்.;

Update: 2024-08-10 13:00 GMT

குமாரபாளையத்திலிருந்து ஈரோடு, இடைப்பாடி செல்லும் பஸ்களில் கே. 1, என இருப்பதால் பயணிகள் குழப்பம்.

குமாரபாளையத்திலிருந்து ஈரோடு, இடைப்பாடி செல்லும் இரண்டு பஸ்ஸும் கே. 1, என இருப்பதால் பயணிகள் குழப்பமடைந்து வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதனால் அம்மா உணவகம் அருகில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து பஸ்களும் சென்று வருகின்றன.


குமாரபாளையத்திலிருந்து இடைப்பாடி செல்லும் டவுன் பஸ் எண் கே 1, குமாரபாளையத்திலிருந்து ஈரோடு செல்லும் டவுன் பஸ் எண் கே 1, என உள்ளது. குறுகலான இடத்தில் பஸ்கள் நின்று இருப்பதால், பயணிகள் குழப்பமடைந்து மாறி உட்கார்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் போர்டு பார்த்து ஏறி கொள்கிறார்கள். ஆனால் படிப்பறிவு இல்லாத எண்ணற்ற பேர், வேலைக்காக குமாரபாளையம் வந்து செல்வதால், அவர்கள் நெம்பர் மட்டும் பார்த்து ஏறிக்கொள்கிறார்கள்.

இதனால் பயணிகளுக்கும், ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வயதான பயணிகள் பஸ் மாறி, மாறி ஏறி, இறங்க பெரும் அவதிப்பட்டு வருவதால், பஸ் எண்களை மாற்றியமைக்க வேண்டி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இரு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Similar News