குமாரபாளையம் அருகே புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பற்றி புகார் மனு

குமாரபாளையம் அருகே சில நபர்கள் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்தமைக்கு பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் செய்தனர்.

Update: 2023-05-16 16:30 GMT

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக குமாரபாளையம் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே சில நபர்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தமைக்கு பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் செய்தனர்.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு, சுபாஷ் நகர் பகுதியில் சில நபர்கள் அங்குள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேலிடம் புகார் மனு கொடுத்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இதே இடத்தில் இரண்டு ஆண்டுகள் முன்பு இதே நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தனர். இது குறித்து தாசில்தார், வி.ஏ.ஓ., சர்வேயர், தட்டான்குட்டை ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என அனைவரிடமும் புகார் மனு கொடுத்து, அளவீடு செய்து பார்த்ததில், அந்த இடம் நீர்வழி ஓடை புறம்போக்கு என்பது உறுதியானது. அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அடியாட்களுடன் அப்பகுதி மக்களை மிரட்டி வருவதால் அனைவரும் அச்சத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

குமாரபாளையம் அப்பன் பங்களா, உடையார்பேட்டை பகுதியில் குரங்குகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இவை மின் கம்பிகளில் விளையாடி மின் கம்பிகள் அறுந்து போக காரணமாகின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் மற்றும் வீடுகளில் நுழைந்து காய்கறிகள், தின்பண்டங்கள் ஆகியற்றை எடுத்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். இதனால் மின்வாரிய பணியாளர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதே போல் ராஜா வீதி, திருவள்ளுவர் வீதி பகுதியில் புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, மீதமுள்ள பெரிய அளவிலான மின் கம்பி கேபிள்கள், ஆங்காங்கே குறுகிய சந்துகளில், பொதுமக்கள் நடக்க கூட முடியாத வகையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள்களில் பாம்பு, தேள் ஆகிய விஷ ஜந்துக்கள் தங்கி வருவதுடன், அவ்வப்போது பொதுமக்களை தீண்டி வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே குரங்குகளை விரட்டவும், புதைவட மீதமுள்ள கேபிள்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகர நிர்வாகி சித்ரா தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News