வேகத்தடையை அகற்ற கமிஷனருக்கு புகார் மனு அளிப்பு
பள்ளிபாளையத்தில் வேகத்தடையை அகற்ற நகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டுமென பாமக மற்றும் சமூகநீதிப்பேரவை சார்பில் நகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பள்ளிபாளையம் நகராட்சி ஆணையருக்கு, சமூக நீதி பேரவை, பா.ம.க. வழக்கறிஞர் மகாலிங்கம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், பழைய இடைப்பாடி சாலையில், புதிதாக இரண்டு வேகத்தடைகள் அமைக்கபட்டுள்ளன. இது உயரமாக போடப்பட்டுள்ளதால் டூவீலர்கள் ஏறி இறங்க பெரிதும் சிரமமாக உள்ளது. பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் தூக்கி வீசப்படும் நிலை ஏற்படுகிறது. விபத்தை தடுக்க போடப்பட்ட வேகத்தடை, விபத்திற்கு காரணமாக இருக்கும் நிலையில் உள்ளதால் இதனை அகற்றி சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.