குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய குடியரசு தின விழாவில் வேலு நாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார் உருவங்களுடன் கூடிய அலங்கார ஊர்திகளை நிராகரித்து, தேச தலைவர்களையும், தமிழ்நாட்டையும் அவமானப்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நகர செயலர் கேசவன் தலைமை வகித்தார். முன்னாள் நகர செயலர் ஈஸ்வரன், நகர குழு உறுப்பினர்கள் சேகர், விஜய் அனந்தன், ஏகானந்தம், ஏ.ஐ.ஒய்.எப். மாவட்ட செயலர் கணேஷ்குமார், நகர செயலர் அசோகன், சி.பி.ஐ. வடக்கு ஒன்றிய செயலர் அர்த்தனாரி உள்பட பலர் பங்கேற்றனர்.