சுதந்திர போராட்ட தியாகியின் மனைவிக்கு நேரில் மரியாதை செலுத்திய ஆணையாளர்
குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவிக்கு நகராட்சி ஆணையாளர் நேரில் மரியாதை செலுத்தினார்.;
குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகி பெருமாளின் மனைவி ஜெயலட்சுமிக்கு ஆணையாளர் சசிகலா நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவிக்கு நகராட்சி ஆணையாளர் நேரில் மரியாதை செலுத்தினார்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழா ஆணையாளர் சசிகலா தலைமையில் கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த ஆணையாளர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை அவரவர் இல்லத்திற்கு சென்று சந்தித்து மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி குமாரபாளையத்தில் பழைய அஞ்சல் தலைமை அலுவலக பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி பெருமாளின் மனைவி ஜெயலட்சுமிக்கு ஆணையாளர் சசிகலா நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகராட்சி மேலாளர் சண்முகம் இனிப்புகள் வழங்கினார்.