தட்டான்குட்டை ஊராட்சியில் வடிகால் அமைக்க அளவிடும் பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே வடிகால் அமைக்க தட்டான்குட்டை ஊராட்சியினர் அளவீடு பணி துவக்கினர்;

Update: 2022-03-01 16:30 GMT
தட்டான்குட்டை ஊராட்சியில் வடிகால் அமைக்க அளவிடும் பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே வடிகால் அமைக்க தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் அளவீடு பணி துவக்கினர்.

  • whatsapp icon

குமாரபாளையம் அருகே வடிகால் அமைக்க தட்டான்குட்டை ஊராட்சியினர் அளவீடு பணி துவக்கினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் 10 தெருக்கள் உள்ளன. ஓரிரு தெருக்களில் மட்டும் வடிகால் அமைக்கப்பட்டது. மற்ற குடியிருப்புவாசிகள் தங்கள் வீடு முன் பள்ளம் அமைத்து  கழிவுநீரை தேங்கி  வருகின்றனர்.  இந்நிலையில், வடிகால் அமைத்து சுகாதார சீர்கேட்டினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம்  நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் வடிகால் அமைக்க திட்டமிட்டு, அதற்கான அளவீடு செய்யும் பணியை துவங்கியது. இதனால் இப்பகுதி மக்கள்  மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Tags:    

Similar News