குமாரபாளையத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் பூஸ்டர் தடுப்பூசி பூடும் பணி துவங்கியது.;

Update: 2022-01-10 17:45 GMT

குமாரபாளையத்தில் மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில்பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. 

குமாரபாளையத்தில் முன்களப்பணியாளர்கள் மற்றும் இரண்டாம் தவணை ஊசி செலுத்திக்கொண்டு 39 வாரங்கள் ஆனவர்களுக்கு பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது.

தி.மு.க.நகர பொறுப்புக்குழு தலைவர் மாணிக்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் சுயம்பிரபா மாணிக்கம் இருவரும், மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News