பள்ளிபாளையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு
பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் 20 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
பழம்பெரும் நடிகரும் மறைந்த, "நடிகர் திலகம்"என அழைக்கப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் இருபதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் வட்டார,நகர அளவிலான சிவாஜி மன்ற நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிவாஜி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.