ஈரோடு மண்டல 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் வருகை

ஈரோடு மண்டல 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் கர்னல் நாயுடு வருகை தந்தார்.

Update: 2022-05-20 17:15 GMT

ஈரோடு மண்டல 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் கர்னல் நாயுடு வருகை தந்தார்.

ஈரோடு மண்டல 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் வருகை தந்தார்.

கோவை என்.சி.சி. பிரிவின் கீழ் செயல்படும் ஈரோடு மண்டல 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் கர்னல் நாயுடு வருகை தந்தார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்புடன் 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் அணில்வர்மா, நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றனர். என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கோவை குரூப் கமாண்டர், பட்டாலியனின் அனைத்து கோப்புகளை ஆய்வு செய்தார். என்.சி.சி. மாணவர்கள், அலுவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.

கமாண்டர் நாயுடு பேசியதாவது:- 15வது பட்டாலியன் கோவை குழுவில் உள்ள அனைத்து பாட்டாலியன்களுக்கும் முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது. கொரோனாவிற்கு பிறகு என்.சி.சி. படை பயிற்சி நேரடியாக தொடங்கியுள்ளதால் மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் மற்றும் ஏ.பி.சி. சான்றிதழ் தேர்வுக்கான பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் சுபேதார் மேஜர் செந்தில்குமார், ராணுவ பயிற்சியாளர்கள், கல்லூரி, பள்ளி என்.சி.சி. அலுவலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News