குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்: தாய் போலீசில் புகார்

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி காணாமல் போனதாக தாய் போலீசில் புகாரளித்துள்ளார்.

Update: 2022-06-24 11:00 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் ராஜேஸ்வரி, 46. இவரது மூத்த மகள் கீர்த்தனாவிற்கு கார்த்திகேயன் என்பவருடன் 2019ல் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

தற்போது இவரது வீட்டில் இருந்து தினமும் நாமக்கல் பி.ஜி.பி.கல்லூரிக்கு கல்லூரி பஸ்ஸில் சென்று பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். ஜூன் 16ல் கல்லூரி பஸ்ஸில் கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மகளை கண்டுபிடித்து தருமாறு குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். 

Tags:    

Similar News