குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் வசிப்பவர் மைதிலி, 38. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். 19 வயதுள்ள மூத்த மகள் வட்டமலை தனியார் கல்லூரியில், ப.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஏப்.9 ல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் திண்டுக்கலை சேர்ந்த விஜயபாலன் என்பவர் மீது சந்தேகம் உள்ளது என மைதிலி குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காணமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.