குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு இடத்தை கலெக்டர், அமைச்சர், எம்.பி. ஆய்வு

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு இடத்தை கலெக்டர், அமைச்சர், எம்.பி. ஆய்வு செய்தனர்.

Update: 2022-01-25 10:45 GMT

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்பி. ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் ஜனவரி 27ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்பி. ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆர்.டி.ஒ. இளவரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், தாசில்தார் தமிழரசி இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறுகையில், குமாரபாளையத்தில் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்பி. ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆர்.டி.ஒ. இளவரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், தாசில்தார் தமிழரசி , இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், கால்நடைத்துறையினர் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினர் என அவர் தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறுகையில், ஜன. 27இல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டோம். அரசு கூறிய விதிமுறைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 150 பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இரண்டு தடுப்பூசி போட்டு, 24 மணி நேரம் முன்பு நெகடிவ் ரிசல்ட் காண்பித்தவர்கள் மட்டும் அனுமதிக்கபடுவார்கள். 6 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி, நகர பொறுப்பாளர் செல்வம், ஒன்றிய செயலர் யுவராஜ், முன்னாள் நகர செயலர் வெங்கடேசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், சுகுமார், விடியல் பிரகாஷ், புவனேஷ், சுசி, இனியா ராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News