தமிழக முதல்வரின் படத்தை எதிர் தரப்பை சேர்ந்த நபர் காலால் உதைத்தால் தி.மு.க.வினர் அதிர்ச்சி
குமாரபாளையம் நகர தி.மு.க கோஷ்டி பூசல் காரணமாக கிளை செயலாளர் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை எதிர் தரப்பை சேர்ந்த நபர் காலால் உதைத்தால் குமாரபாளையம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
தமிழக முதல்வரின் படத்தை எதிர் தரப்பை சேர்ந்த நபர் காலால் உதைத்தால் தி.மு.க.வினர் அதிர்ச்சி
குமாரபாளையம் நகர தி.மு.க கோஷ்டி பூசல் காரணமாக கிளை செயலாளர் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை எதிர் தரப்பை சேர்ந்த நபர் காலால் உதைத்தால் குமாரபாளையம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் நகராட்சி பகுதி 33 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இந்த நகராட்சி பகுதியை குமாரபாளையம் நகர திமுகவினர் வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டு இரண்டு நகரச் செயலாளர் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு நகரப் பகுதியில் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் நகர செயலாளர் உள்ளார். கடந்த வாரம் 14 வது வார்டு செயலாளராக உள்ள விஸ்வநாதன் என்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மற்றொரு தரப்பினர் கிளை செயல்வீரர்கள் கூட்டம் போட்டதால் மோதல் ஏற்பட்டது. இதனை கேட்ட கிளைச்செயலாளர் விஸ்வநாதனை எதிர் தரப்பினர் அடித்ததால் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எதிர் தரப்பை சேர்ந்த நபர் ஒருவர் , விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைக்கும் வீடியோ காட்சி தற்பொழுது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் குமாரபாளையம் தி.மு.க.வினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 14 வது வார்டு கிளை செயலாளர் விஸ்வநாதன் குமாரபாளையத்தில் நிலவி வரும் திமுகவின் அவல நிலையை தி.மு.க.வின் நிர்வாகி ஒருவருக்கு அலைபேசியில் மனக்குமுறலுடன் பேசும் ஆடியோவும் தற்பொழுது இணையதளத்தில் பகிரப்பட்டு வருவதால் குமாரபாளையம் நகர தி.மு.க.வினர் வருங்காலங்களில் தாங்கள் எவ்வாறு செயல்படுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி தின்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவங்கள் காரணமாக குமாரபாளையம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை நிலவி வருகின்றன. அலைபேசியில் கிளை செயலர் விஸ்வநாதன் பேசியதாவது:
கட்சியை பல ஆண்டுகளாக வளர்த்து வந்தேன். அ.தி.மு.க. கோட்டையாக இருந்த இந்த வார்டை, தி.மு.க. கோட்டையாக மாற்றினேன். எனக்கு தெரியாமல் கிளை கழக கூட்டம் நடத்தினார்கள். நேரில் சென்று கேட்டால் அடிக்கிறார்கள். எனது அலுவலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை எதிர் தரப்பினர் காலால் எட்டி உதைக்கிறார்கள். வரும் காலத்தில் தி.மு.க.வின் நிலை, குமாரபாளையத்தில் என்ன ஆகும் என்று தெரியவில்லை. அராஜகம் அதிகமாகி விட்டது. இதனை கட்சியின் தலைமை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
விஸ்வநாதன் மகள் தீபா, நகரமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
படவிளக்கம் :
குமாரபாளையம் நகர தி.மு.க கோஷ்டி பூசல் காரணமாக கிளை செயலாளர் விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை எதிர் தரப்பை சேர்ந்த நபர் காலால் உதைத்தார்.