அரசு கலை கல்லூரி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி!

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.;

Update: 2024-09-24 11:45 GMT

 அரசு கலை கல்லூரி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

குமாரபாளையத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். கல்லூரி மாணவ, மாணவியர்கள் தூய்மை விழிப்புனர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும், கல்லூரி நுழைவுப்பகுதி முதல் சேலம் சாலை வரை மனித சங்கிலியில் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ரமேஷ்குமார் ஆகியோர் தூய்மையே சேவை குறித்து மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர்.

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

Tags:    

Similar News