குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-09-17 11:28 GMT

குமாரபாளையம் நகராட்சி சார்பில் நடந்த தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடிசைத்து துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாஸ் கிளீனிங் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் பெயரில் அரசு வழிகாட்டுதல் படி விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கியது. ஆணையாளர் சரவணன் தலைமை வகிக்க, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் அரசு கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

பல முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி, மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர். காவிரி ஆற்றங்கரையோரம் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது. சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிதி உதவி வழங்கினார்.

குமாரபாளையம் 15 வது வார்டு குள்ளங்காடு கலைவாணி தெருவில் சிறுபாலம் அமைத்து மழை நீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையான ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் நாகராஜ் என்பவர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் வழங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், கந்தசாமி, விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News