குமாரபாளையம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தூய்மையே சேவை நிகழ்ச்சி’
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை பாரத இயக்கம், தூய்மையே சேவை - 2024 என்ற நிகழ்ச்சி நடந்தது.;
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை பாரத இயக்கம், தூய்மையே சேவை - 2024 என்ற நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை பாரத இயக்கம், தூய்மையே சேவை - 2024 என்ற நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பங்கேற்று, தூய்மை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் தூய்மை குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், கல்லூரி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கௌதம், கௌரி மற்றும் வெங்கடேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் செய்திருந்தார்.